ரோஹித் ஷர்மாவின் ரன் மழை: ஆட்டம் முடிந்ததும் அடித்தது மழை!

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (20:07 IST)
தென் ஆப்பிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி பாதியில் முடிந்துள்ள நிலையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்தியா வென்று வெற்றியை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. ஆரம்பத்திலேயே தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் விக்கெட்டை இழக்க, தொடர்ந்து புஜாராவும், கோலியும் ஆட்டம் இழக்க இந்திய அணி தோற்க போகிறது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொத்த பொறுப்பையும் தான் ஏற்றுக்கொண்ட ரோகித் ஷர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து விளாசினார்.

கூடவே ரஹானேவும் தன் பங்குக்கு ஒரு அரைசதம் வீழ்த்த ஸ்கோர் கிடுகிடுவென ஏற தொடங்கியது. ஆட்டம் முடியும் சூழலில் 58 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை இந்தியா பெற்றுள்ளது. ஆட்டம் முடிந்த நிலையில் ராஞ்சியில் மழை வலுத்துள்ளது. மீத ஆட்டம் நாளை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments