இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோகித் ஷர்மா காயம் காரணமாக நீண்ட காலம் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார்.
இந்நிலையில், தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரின் இந்திய புளூ அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியொதர் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்தியா ‘புளூ’, இந்தியா ‘ரெட்’ என இரு அணிகள் பங்கேற்கும்.
இப்போட்டிக்கான அணிகளை இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ளது. இதில், ரோஹித் சர்மா இந்திய புளூ அணியின் கேப்டனாகவும், இந்திய ரெட் அணியின் கேப்டனாக பார்த்தீவ் படேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.