Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பவுண்டரி ஒரு சிக்ஸ்… வந்த வேகத்தில் கிளம்பிய பண்ட்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (17:11 IST)
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது ஐந்தாவது விக்கெட்டை இழந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடிய நிலையில் நேற்று 123 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் இன்று சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆமை வேகத்தில் சென்ற ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கும் விதமாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 20 பந்துகளில் 25 ரன்களை சேர்த்த அவர் அவுட்டாகி நடையைக் கட்டினார். தற்போது இந்திய அணி 154 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments