Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகையோடு ரகசிய பழக்கம்? சானியா மிர்சா பிரிந்ததன் காரணம்!?

Advertiesment
Sania Mirza
, வெள்ளி, 11 நவம்பர் 2022 (13:37 IST)
பிரபல முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சோயப் மாலிக்கை விவாகரத்து செய்ததாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதற்கு காரணம் ஒரு நடிகை என பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா இந்தியாவுக்காக ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர். இவரும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சோயப் மாலிக்கும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இஷான் என்ற ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக தற்போது சானியா மிர்ஸா இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் இருவருக்கும் இடையே விவாகரத்து நடைபெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து சானியா மிர்ஸா – சோயப் மாலிக் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இவர்களது விவாகரத்திற்கு காரணம் சோயப் மாலிக் பாகிஸ்தானின் பிரபல நடிகை ஒருவருடன் ரகசிய தொடர்பில் இருந்ததை சானியா மிர்சா கண்டுபிடித்ததே என வதந்திகள் பரவியுள்ளது. ஆயிஷா ஓமர் என்ற அந்த நடிகை சோயப் மாலிக்குடன் சில விளம்பர படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் சானியா – சோயப் உண்மையாகவே விவாகரத்து பெற்று விட்டார்களா? என்ன காரணம்? என்பதை அவர்கள் சொல்லாமல் அறிய முடியாது என்பதே நிதர்சனம்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேட்டிங்ல பிரச்சினையில்ல.. பவுலிங்தான் சொதப்பிட்டு..? – தோல்வி குறித்து ரோகித் சர்மா!