Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த உலக கோப்பைக்கு ரெடியா? கால்பந்தில் கால்பதிக்குமா இந்திய அணி? – நாளை கத்தாருடன் மோதல்!

Sunil Chhedri
, திங்கள், 20 நவம்பர் 2023 (13:45 IST)
ஆண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதி சுற்றில் நாளை இந்திய அணி கத்தாரை எதிர்கொள்கிறது.



நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்த முறை ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை தவற விட்டுவிட்டது இந்தியா. ஆனால் இதேபோல நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவின் கால்பந்து அணி முன்னேற்றம் கண்டு வருகிறது.

சமீப காலமாகவே இந்தியாவில் கிரிக்கெட் அளவிற்கு கால்பந்து போட்டிகளும் கவனம் ஈர்க்க தொடங்கியுள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுக்கல் நாடுகளை போல இந்தியாவும் களம் இறங்கும் நாளை பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தகுதி போட்டியிலேயே இந்திய அணி வெளியேறி வந்த நிலையில் இந்த முறை முன்னேற்றம் கண்டுள்ளது.

2026ம் ஆண்டிற்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி போட்டிகள் 3 சுற்றுகளாக நடைபெறுகின்றது. இதில் 2வது சுற்றில் 36 நாட்டு அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலா 2 லீக் போட்டிகளில் மோதுகின்றன. இவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும். அந்த மூன்றாவது சுற்றில் நடக்கும் லீக் போட்டிகளில் தகுதி பெறும் அணிகள் உலக கோப்பைக்கு தகுதி பெறும்.

webdunia


இதில் இரண்டாம் சுற்றில் ஏ பிரிவில் கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்துள்ள சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி தனது முதல் போட்டியில் குவைத் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள கத்தாருக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் ஏ பிரிவில் முதல் இடத்தை இந்திய அணி பெறுவதுடன் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறலாம். இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியை ஃபிஃபா நிர்வாகமே மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு இணையாக குறிப்பிட்டு பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலக கோப்பை கிரிக்கெட்டில் மட்டுமே இந்தியாவின் ஆதிக்கத்தை கண்டு வரும் நாம் வரும் காலங்களில் உலக கோப்பை கால்பந்திலும் இந்தியாவின் ஆதிக்கத்தை காண இயலுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''நெஞ்சம் உடைந்து சிதறியது''-இந்திய அணி தோல்வி பற்றி செல்வராகவன்