Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மாத ஓய்வுக்குப் பின் களத்துக்கு வந்த ஜட்டு!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (19:38 IST)
இந்திய அணியின் முதுகெலும்புகளில் ஒருவரான ரவிந்தர ஜடேஜா காயம் காரணமாக அணியில் இருந்து விலகி ஓய்வெடுத்துவந்தார்.

இந்திய அணிக்கு இப்போது இருக்கும் தரமான ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவிந்தர ஜடேஜா. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மட்டும் இல்லாமல் பீல்டிங்கிலும் ஜடேஜா கிங். அதனால் அடிக்கடி அவர் காயப்படுவதும் உண்டு. சமீபத்தில் நியுசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முழங்கையில் காயமடைந்தார். இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக அவர் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் அடுத்தடுத்து இலங்கை தொடர் மற்றும் ஐபிஎல் என போட்டிகள் வர உள்ள நிலையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கியுள்ளார். தனது கம்பேக் குறித்து பேசியுள்ள அவர் ‘பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பயிற்சி மேற்கொண்டேன். டச்சில்தான் இருக்கிறேன். முதல் பயிற்சிக்குப் பிறகு நன்றாக உணர்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறுக்க இந்த கௌஷிக் வந்தா… இலங்கை- வங்கதேசம் போட்டிக்கு நடுவே வந்த பாம்பு!

யார்றா அந்த பையன்… நான்தான் அந்த பையன்.. U19 போட்டியில் சூர்யவன்ஷி படைத்த சாதனை!

அன்றைக்கு ரொனால்டோவுக்கு நடந்தது இப்போ பும்ராவுக்கு நடக்குது! - டெல் ஸ்டெய்ன் ஆதங்கம்!

நான் இதை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்… பும்ரா ஓய்வு குறித்து ரவி சாஸ்திரி ஆதங்கம்!

கேப்டன் பொறுப்பு ஏற்றபின் இரு டெஸ்ட்டிலும் கில் சதம்.. இதற்கு முன் இந்த சாதனையை செய்தவர்கள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments