Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியின் அனுபவத்தை சந்தையில் வாங்கவோ விற்கவோ முடியது: ரவி சாஸ்திரி!

Advertiesment
தோனியின் அனுபவத்தை சந்தையில் வாங்கவோ விற்கவோ முடியது: ரவி சாஸ்திரி!
, வெள்ளி, 2 மார்ச் 2018 (16:52 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய கிரிக்கெட்டில் பல மாற்றங்களையும் வெற்றிகளையும் கொண்டுவந்த முக்கிய வீரராக கருதப்படுகிறார். 
 
இதன் பின்னர் பல விமர்சனங்களால் டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேரினார். அதன் பின்னர் கேப்டன் பதவியையும் துறந்தார். அதன் பின்னர் கோலியின் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், இந்திய அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனி பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தோனி சிறந்த ஒருநாள் போட்டி வீரர். இவரது அனுபவத்தை சந்தையில் வாங்கவோ விற்கவோ முடியாது. இவரது அனுபத்திற்கு மாற்றுஆள் கிடையாது. 
 
அதேபோல், கடைசி ஓவரில் விளையாடுவதற்கும், போட்டியை நல்ல முறையில் முடித்து வைப்பதற்கு இவரை விட சிறந்த ஒருவர் இன்னும் வரவில்லை. தோனி 5, 6, அல்லது 7 என எந்த இடத்தில் களமிறங்கினாலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துபவர் என தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கபிள் தேவ், கோலியின் ஆக்ரோஷமும், தோனியின் அமைதியும் உலகக்கோப்பையை வெல்ல அவசியமானது என தெரிவித்திருந்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹர்திக் பாண்டியாவுக்கு கபில்தேவ் அட்வைஸ்