Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னால் தூங்க முடியவில்லை… குடும்பத்தை நினைத்து கண்ணீர்விடும் ரஷித் கான்!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (10:09 IST)
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் என்னால் தூங்கமுடியவில்லை என சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் முகாமிட்டு இருந்த அமெரிக்கப் படைகள் நாடு திரும்பியதை அடுத்து தலிபான்களின் தாக்குதல் இப்போது ஆப்கானை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. உலகமே உற்றுப்பார்க்கும் ஒரு அரசியல் மாற்றமாக தாலிபான்களை கைப்பற்றுதல் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் விளையாடி வரும் ரஷீத் கான் தனது குடும்பத்தைப் பற்றி வருத்தத்தில் உள்ளதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அதுபற்றி பீட்டர்சன் ‘நான் ரஷீத்கானோடு நீண்ட நேரம் இதுபற்றி பேசினேன். அங்கிருக்கும் தனது குடும்பத்தை வெளிநாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லையே என்று அவர் வருத்தத்தில் உள்ளார்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஷீத்கான் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘என்னால் தூங்கமுடியவில்லை’ என ஆப்கனில் இருக்கும் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி வருத்தப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments