மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் கேப்டன் – ரஷீத் கான் சாதனை !

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (13:23 IST)
சர்வதேசப் போட்டிகளில் மிகக்குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான தோல்வியடைந்தது. இதனால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த வீரரைத் தூக்கிவிட்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வடிவிலானக் கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவரைக் கேப்டனாக நியமித்துள்ளனர்.

இதன் மூலம் குறைந்தவயதில் டெஸ்ட் போட்டிகளுக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அவர் 20 வயது 350 நாட்களில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னால் ஜிம்பாப்வேயின் டட்டண்டா டைபு 20 வயது 358 நாட்களில் கேப்டனாக நியமிக்கப்பட்டு குறைந்த வயதில் கேப்டனான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எஸ். தோனியின் சாதனைக்கு குறி வைத்த விராட் கோலி! நாளை அந்த சாதனை நிகழுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் கருத்து கூறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாரா முகமது ரிஸ்வான்?

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments