ரெய்னாவை கழட்டி விடும் சிஎஸ்கே? அதிகாரப்பூர்வ தகவல்!!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (11:57 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரெய்னாவை தவிக்கப்போவதாக வெளியான தகவல்களுக்கு அணி நிர்வாகம் பதிலளித்துள்ளது. 


 
 
சிஎஸ்கே அணியில் சின்ன ரெய்னாவை தக்கவைக்க போவதில்லை என சமீபத்தில் சில தகவல் வெளியான வண்ணம் இருந்தது. 
 
கடந்த இர்ண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் களமிரங்காமல் இருந்த சிஎஸ்கே அனி இந்த ஆண்டு தடை நீங்கிஉஅதை அடுத்து போட்டியில் களமிறங்கவுள்ளது. 
 
சிஎஸ்கே அணியோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளது. 
 
இரு அணிகளும் திரும்புவதால், ஒவ்வொரு அணியிலும் இரண்டு உள்நாட்டு வீரர்கள், 1 வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தவிர மற்ற எல்லா வீரர்களையும் ஏலத்தில் விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
 
இதன்படி சென்னை அணியில் அஷ்வின், தோனி, டுபிளசி ஆகியோர் தக்கவைக்கப்படுவார்கள் எனவும் சுரேஷ் ரெய்னா தவிர்க்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின. 
 
ஆனால், இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டிவிட்டரில் அதிகாரபூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. 
 
அதாவது, ரெய்னாவை தக்க வைக்கப்போவதில்லை என பல வதந்திகள் இணையதளம் மூலம் பரவுகிறது. அதை நம்ப வேண்டாம். சென்னை அணியின் பழைய பெருமை அப்படியே திரும்பும் என குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் சுதாரித்த மே.இ.தீவுகள்.. சதத்தை நெருங்கிய கேம்ப்பெல்.. ஹோப் அதிரடி ஆட்டம்..!

ஃபாலோ ஆன் ஆன மேற்கிந்திய தீவுகள்.. 2வது இன்னிங்ஸிலும் விக்கெட் இழப்பு.. தொடர்கிறது குல்தீப் வேட்டை..!

குல்தீப் யாதவ், ஜடேஜா அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுக்களை இழந்தது மே.இ.தீவுகள்..!

4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்.. இந்தியாவுக்கு இன்னொரு இன்னிங்ஸ் வெற்றியா?

டபுள் செஞ்சுரியை மிஸ் செய்த ஜெய்ஸ்வால்.. அதிரடி சதம் அடித்த கில்.. இந்தியா டிக்ளேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments