Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேடி வந்து உதவிய ரெய்னா: கொல்கத்தா வீரர் நெகிழ்ச்சி!

Advertiesment
தேடி வந்து உதவிய ரெய்னா: கொல்கத்தா வீரர் நெகிழ்ச்சி!
, வெள்ளி, 23 மார்ச் 2018 (20:09 IST)
இதற்கு முன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடிய ரிங்கு சிங் இந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.80 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 
 
இடது கை பேட்ஸ்மேனான இவர், 2009 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச 16 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும், அதன் பின்னர் 19 வயதுக்கட்பட்டோருக்கான அணியிலும் இடம் பெற்றார்.
 
விஜய்ஹசாரே போட்டியில், ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் சதம் அடித்ததால், ரிங்கு சிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். உத்தரப் பிரதேச அணிக்காக ரஞ்சிப் போட்டியில் விளையாடும் போது சுரேஷ் ரெய்னாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
 
சமையல் எரிவாயு குடோனில் தங்கிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு சுரேஷ் ரெய்னா தேடி வந்து உதவி செய்தாராம். ரெய்னாவை குறித்து ரிங்கு சிங் கூறியதாவது, நான் ரூ.30 முதல் ரூ.35 லட்சத்துக்கு மட்டுமே விலைபோவேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால், கொல்கத்தா அணி என்னை ஏலத்தில் எடுத்தது மகிழ்ச்சி. 
 
ஒருநாள் கொல்கத்தா அணியின் அனைத்து வீரர்களும் ஹோட்டலில் தங்கி இருந்தோம். அப்போது, சுரேஷ் ரெய்னா என்னைத் தேடி வந்திருந்தார். எனக்கு வாழ்த்து தெரிவித்து, ஆலோசனைகளைக் கூறினார். எனக்கு இரு கிளவுஸ்களையும், கிரிக்கெட் பேட்டையும் பரிசாக அளித்துவிட்டு சென்றார் என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் போட்டிக்காக தீவிர பயிற்சியில் தோனி: வைரல் வீடியோ