Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிப்பெருமை பேசிய ரெய்னா & ஜடேஜா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (16:05 IST)
இந்திய அணியின் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சமீபத்தில் சாதிப்பெருமை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

சமீபத்தில் ரெய்னா அளித்த ஒரு நேர்காணலில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு எப்படி பொருந்தி போனீர்கள் எனக் கேட்டதற்கு ‘நான் ஒரு பிராமின் என்பதால் என்னால் எளிதாக தமிழ்நாட்டோடு ஒன்ற முடிந்தது’  எனக் கூறினார். ஆனால் தமிழ்நாட்டு கலாச்சாரம் ஒன்றும் பிராமண்யக் கலாச்சாரம் இல்லை என்று சொல்லி தமிழக ரசிகர்கள் ரெய்னாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் பொதுவெளியில் தனது சாதி பெருமை கூறியதற்காக கேலிகளும் எழுந்தன.

இதையடுத்து ஜடேஜா தன்னுடைய டிவிட்டரில் ‘பெருமைமிகு ராஜபுத்திரன்’ என்று கூற, அவருக்கும் இப்போது கண்டனங்கள் எழுந்துள்ளன. அதில் ‘நாம் முதலில் அனைவரும் இந்தியர்கள். சாதிப்பெருமை பேசி வீரர்கள், ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் இழக்கக் கூடாது’ எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments