கான்பூர் மைதானத்தில் இன்று மழை.. ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி..!

Siva
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (13:16 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக நேற்று ஆட்டம் தடைபட்டது, அதேபோல இன்று மழை பெய்வதால், இன்னும் ஆட்டம் தொடங்கவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வங்கதேச அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்கிய நிலையில், முதல் நாள் முடிவில் வங்கதேச அணி 35 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது, இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாள் முழுவதும் மழை பெய்ததால், ஒரு பந்தும் வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்றும் மழை பெய்து வருவதால், கான்பூரில் இதுவரை ஆட்டம் தொடங்கவில்லை. நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது, மேலும் மதியம் 2 மணிக்கு மறு ஆய்வு செய்வார்கள். மைதானம் ஆட்டத்துக்கு ஏற்றதாக உள்ளதா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.

இன்றைய ஆட்டமும் தடைபட்டுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்."


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments