Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

vinoth
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (07:25 IST)
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ‘இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும். போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு  முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம்.

இதன் மூலம் இப்போது போட்டிகளில் ஒரு அணி 12 வீரர்களோடு விளையாடுகிறது என்றே சொல்லிவிடலாம். இந்த விதிமுறை ஐபிஎல் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக திணிக்கப்பட்டதாகவே உள்ளது. ஆனால் இதனால் பவுலர்களின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஆல்ரவுண்டர்கள் பந்துவீச அழைக்கப்படுவதும் குறைந்துள்ளது. இந்த விதிகுறித்து ரோஹித் ஷர்மா, விராட் கோலி, முகமது சிராஜ், அக்ஸர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனால் இம்பேக்ட் ப்ளேயர் விதி குறித்து ஆலோசிப்பதாக பிசிசிஐ தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் அடுத்த சீசனில் இந்த விதி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 2025-2027 சீசன் வரை இந்த விதி தொடரும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் போட்டிகளில் முக்கிய சாதனைகளில் தோனியை முந்திய ஜடேஜா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்… இந்திய அணி இன்று அறிவிப்பு?

கே.எல்.ராகுல், ஜடேஜா, துருவ் அடித்த சதங்கள்.. 500ஐ நெருங்கியது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா.. அடுத்த இலக்கு சேவாக் தான்..!

கே.எல்.ராகுல் சதத்தை அடுத்து 3 பேட்ஸ்மேன்கள் அடித்த அரைசதங்கள்.. ஜெட் வேகத்தில் உயரும் இந்தியா ஸ்கோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments