Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை பெற்று கொடுத்தவுடன் ஓய்வு பெறுகிறார் ராகுல் டிராவிட்.. !

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (07:43 IST)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வாங்கி கொடுத்தவுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடந்த நிலையில் இதில் இறுதி போட்டியில் நேற்று நடந்தது. நேற்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 
 
சில வருடங்களாக இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் சொதப்பிய நிலையில் நேற்றைய போட்டியில் அந்த தவறை செய்யாமல் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றினார். 
 
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை அடுத்து அவர் இன்று ஓய்வு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்காக உலக கோப்பையை பெற்று கொடுத்தவுடன் ஓய்வு பெறும் ராகுல் டிராவிட் அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments