Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்! நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை தோற்கடித்த நடால்!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (11:21 IST)
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை, ரபேல் நடால் தோற்கடித்துள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் உள்ள பாரிஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு நாட்டு வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில் பிரபல செர்பிய நாட்டு வீரர் நோவக் ஜோகோவிச் அர்ஜெண்டினாவின் டியாகா ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

அதேபோல மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் கனடா வீரர் பெலிக்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் உலக பிரபல டென்னிஸ் வீரர்களான ஜோகோவிச்சும், நடாலும் மோதிக் கொண்டனர்.

இந்த போட்டியில் இருவரும் சம பலத்துடன் மோதிக் கொண்டனர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 6-2, 4-6, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ரபேல் நடால், ஜோகோவிச்சை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி.. ரவிசாஸ்திரியின் இந்திய லெவன் அணி..!

முதல் நாளிரவுதான் எனக்கு மெஸேஜ் வந்தது.. ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!

நேற்றைய போட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான விருதைப் பெற்ற கோலி..!

அக்ஸர் படேலின் காலைத் தொடச் சென்ற விராட் கோலி.. ஓ இதுதான் காரணமா?

போட்டிய எல்லாம் ஜெயிச்சுடுறோம்… ஆனா டாஸ்தான்… உலக சாதனைப் படைத்த ரோஹித் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments