சீனாவில் நடைபெறும் ஓபன் டென்னிஸ் ஆட்டத்தில் பி.வி.சிந்து தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேட்மிண்டன் ஆட்டத்தில் தங்க பதக்கங்கள் வென்று உலக அளவில் சாதனை புரிந்து இந்தியாவை தலைநிமிர செய்தவர் பி.வி.சிந்து. தற்போது சீனாவில் நடைபெற்று வரும் ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடினார் பி.வி.சிந்து. தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங்கோடு மோதிய சிந்து மிக அதிகமான புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அதேபோல் மற்றொரு பேட்மிண்டன் பிரபலமான சாய்னா நேவால் மற்றுமொரு தாய்லாந்து வீராங்கனை ஆங்பாங் ரூங்பானுடன் மோதி தோல்வியை தழுவினார். சீன ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே இந்தியாவின மிக சிறந்த இரண்டு வீராங்கனைகள் தோல்வியை தழுவியது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.