Publish Date: Sun, 08 Apr 2018 (19:25 IST)
Updated Date: Sun, 08 Apr 2018 (19:26 IST)
ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அதிவேக அரைசதம் விளாசி அசத்தினார். கருண் நாயரும் அரைசதம் விளாசினார். 18.4 ஓவரில் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.