Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

Siva
செவ்வாய், 3 ஜூன் 2025 (19:10 IST)
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில், சற்று முன் நடைபெற்ற டாஸில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
 
இதனை அடுத்து, பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 5 மணியிலிருந்து கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இன்னும் சில நிமிடங்களில் போட்டி தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பஞ்சாப் மற்றும் பெங்களூர் ஆகிய இரு அணிகளிலும் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், கடந்த போட்டியில் விளையாடிய அணியைதான் இந்த போட்டிக்கும் பயன்படுத்துகிறோம் என்றும் இரு அணிகளின் கேப்டன்கள் அறிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், இரு அணிகளில் உள்ள வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:
 
 
ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு XI:
 
பில் சால்ட்
 
விராட் கோஹ்லி
 
மயங்க் அகர்வால்
 
ரஜத் படிதார் (கேப்டன்)
 
லியம் லிவிங்‌ஸ்டோன்
 
ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்)
 
ரொமாரியோ ஷெப்பர்ட்
 
க்ருனால் பாண்ட்யா
 
புவனேஸ்வர் குமார்
 
யஷ் தயால்
 
ஜாஷ் ஹேஸல்வூட்
 
 
பஞ்சாப் கிங்ஸ் XI:
 
பிரியாஞ்ஷ் ஆர்யா
 
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்)
 
ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்)
 
நேஹல் வடேரா
 
ஷஷாங்க் சிங்
 
மார்கஸ் ஸ்டாயினிஸ்
 
விஜய்குமார் வைஷாக்
 
அஸ்மத்துல்லா உமர்ஸாய்
 
கைல் ஜாமிசன்
 
அர்ஷ்தீப் சிங்
 
யுஸ்வேந்திர சஹால்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி.. அழுது கொண்டே வெளியேறிய நெய்மர்..!

இந்திய அணி ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடவேக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் கருத்து!

டெவால்ட் பிரேவிஸ் குறித்து நான் இப்படிதான் சொன்னேன்… அஸ்வின் விளக்கம்!

ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments