இந்திய அணியின் தூண் புஜாராவை நீக்கிவிட்டு அவருக்கு பதில் பிருத்விஷா இறக்கப்பட வேண்டுமென ஆஸி பவுலர் ஹாக் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய தூண் என்றால் அது புஜாராதான். சமீபத்தில் நடந்த ஆஸி தொடரில் அவர் உடல் முழுவதும் பந்துகளால் அடிவாங்கி நின்ற போட்டியே அதற்கு சாட்சி. ஆனால் இப்போது புஜாராவுக்கே ஆப்பு வைக்க கோலி எண்ணிவிட்டதாக சொல்லப்படுகிறது. 34 வயதாகும் புஜாராவுக்கு மாற்று வீரர்களை தயார் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஆஸி அணியின் சுழல்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் பிருத்வி ஷாவை புஜாராவுக்கு பதிலாக இறக்கவேண்டும். அவர் இளம் ரத்தம். தொடக்க ஆட்டக்காரராக விளையாடவும் அவர் பொருந்துவார். எனக் கூறியுள்ளார்.