Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புரோ கபடி: கமல்ஹாசன் அணி தோல்வி

Advertiesment
kabadi
, சனி, 29 ஜூலை 2017 (07:10 IST)
புரோ கபடி போட்டிகள் நேற்று முதல் தொடங்கப்பட்ட நிலையில் முதல் ஆட்டத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அம்பாசிடராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.



 
 
நேற்று நடந்த தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆரம்பம் முதலே அசத்தி வந்த தெலுங்கு டைட்டன்ஸ் இறுதியில் 32-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
 
முன்னதாக நடந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பேட்மிண்டன் வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், குருசாய் தத், தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மற்றும் தெலுங்கு நடிகர்கள் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

291 ரன்களில் சுருண்ட இலங்கை; 369 ரன்கள் முன்னிலையில் இந்தியா