Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: புனே அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர்

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (22:20 IST)
புரோ கபடி போட்டி தொடர் கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் ஜெய்ப்பூர் மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணி ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. 
 
ஜெய்ப்பூர் அணி வீரர்கள் ரெய்டில் மட்டும் அதிக புள்ளிகளை எடுத்து முன்னேறினர். இறுதியில் ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும், புனே அணி 25 புள்ளிகள் எடுத்ததால் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது 
 
இன்றைய போட்டியின் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் டெல்லி அணி 26 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. பெங்கால் அணி 25 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் ஜெய்பூர் அணியும் 25 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.
 
பெங்களூர் அணி 22 புள்ளிகளும், ஹரியானா 21 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 20 புள்ளிகள் எடுத்து நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
நாளை மும்பை - பாட்னா அணிகளும், குஜராத் - ஜெய்ப்பூர் அணிகளும் மோதவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments