Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: பெங்களூரு அணி சாம்பியன்

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (07:23 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நடந்து கொண்டிருந்த புரோ கபடி போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதி போட்டியில் பெங்களூரு அணி குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

நேற்றைய இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையாக போராடினர். முதல் பாதியின் 12 நிமிடங்கள் வரை இரண்டு அணிகளும் தலா 4 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தாலும் அதன்பின்னர் பெங்களூர் அணியின் கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க தொடங்கியது. முதல் பாதி முடியும் ஒரு நிமிடத்திற்கு முன்பு குஜராத் அணி ஒரே ரைடில் நான்கு புள்ளிகள் பெற்றதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. முதல் பாதியின் முடிவில் குஜராத் அணி 16-9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் இருந்தது.

இருப்பினும் இரண்டாம் பாதியில் சுதாரித்து விளையாடி பெங்களூர் அணி கொஞ்சம் கொஞ்சமாக புள்ளிகளை சேர்த்து வந்தது. ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 23-22 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத்தை முந்தவும் செய்தது. இந்த முன்னணி கடைசி வரை தொடரந்ததால் இறுதியில் 38-33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத்தை வீழ்த்தி 2018ஆம் ஆண்டின் சாம்பியன் பட்டத்தை பெங்களூரு அணி வென்றது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

சிராஜ் ஒரு போர் வீரர் போன்றவர்… ஜோ ரூட் புகழாரம்!

வெற்றியோ தோல்வியோ.. 96 ஆண்டு கால சாதனையை சமன் செய்த இந்தியா - இங்கிலாந்து 5வது டெஸ்ட்..!

WTC தொடர்களில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments