Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஜாரா ஒரு சுவர்… அவர் விக்கெட் எடுப்பதற்கே முன்னுரிமைக் கொடுத்தேன் –ஆஸி பவுலர் !

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (18:10 IST)
ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்திய அணியில் புஜாரா விக்கெட்டை எடுப்பதற்கே முன்னுரிமைக் கொடுத்தேன் எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து கம்மின்ஸ் 21 விக்கெட்களை வீழ்த்தி இந்திய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். டெஸ்ட் பவுலர்களின் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கம்மின்ஸ் தான் அதற்கு முழுதும் தகுதியானவரே என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார்.

இந்நிலையில் அந்த தொடர் குறித்து இப்போது அவர் அளித்த நேர்காணலில் ‘முதல் டெஸ்ட்டோடு கேப்டன் கோலி இந்தியா திரும்பியபின்னர், நான் புஜாரா விக்கெட்டை வீழ்த்துவதில் அதிகக் கவனம் கொண்டேன், அவர் ஒரு செங்கல் சுவர் போன்றவர். புஜாராவுக்கு எதிராக இந்த டெஸ்ட் தொடரில் நான் பந்துவீசியதும், அவரைஆட்டமிழக்கச் செய்ய முயற்சித்ததும் போராட்டமாகவே கருதுகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

இந்த தொடரில் 8 இன்னிங்ஸ்களில் அவர் புஜாராவை 5 முறை ஆட்டமிழக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments