இலங்கை அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டது, இன்னொரு போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையில் நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி கராச்சி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் அடித்தது. தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா 133 ரன்கள் எடுத்து அசத்தினார்
இதனையடுத்து 298 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. பாகிஸ்தான் அணியின் ஃபாகர் ஜமான் 76 ரன்களும், அபித் அலி 74 ரன்களும், எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2 -0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பதும் அபித் அலி ஆட்டநாயகனாகவும், பாபர் அஜாம் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி வரும் 5ம் தேதி முதல் தொடங்குகிறது