Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னிங்ஸ் வெற்றியை நெருங்கியது ஆஸ்திரேலியா: ஸ்டார்க் அபார பந்துவீச்சு

Webdunia
ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (15:43 IST)
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் இடையில் நடந்து வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையை நெருங்கி உள்ளது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வார்னரின் அபார முச்சத்தாலும், லாபிசாஞ்சேவின் சதத்தாலும் 589 ரன்கள் குவித்தது. இதனையடுத்து டிக்ளேர் செய்த ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது 
 
பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தாலும், பாபர் அசாம் மற்றும் யாஷிர் அகமது ஆகியோர்களின் அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 302 ரன்கள் எடுத்தது. இருப்பினும் ஃபாலோ ஆன் ஆனதால் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது
 
பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் விக்கெட்டுக்களை மளமளவென இழந்து வருகிறது. சற்றுமுன் வரை அந்த அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் கைவசம் 7 விக்கெட்டுக்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 248 ரன்கள் பின் தங்கியுள்ளதால் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் 6-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி.. அழுது கொண்டே வெளியேறிய நெய்மர்..!

இந்திய அணி ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடவேக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் கருத்து!

டெவால்ட் பிரேவிஸ் குறித்து நான் இப்படிதான் சொன்னேன்… அஸ்வின் விளக்கம்!

ஆசியக் கோப்பை அணியில் ஷுப்மன் கில்லுக்கே இடமில்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments