Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பகீர் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (22:47 IST)
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியக் குடிமகனாகவும் இந்துக்களுக்கு சமமாகவும் நடத்தபப்ட்டு வரும் நிலையில் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் அவமதிக்கப்படும் வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன
 
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் தான் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவமதிக்கப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா என்பவர் கூறியபோது ’நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் என்னிடம் பாகுபாடு காட்டினார்கள். நான் இந்துவாக இருப்பதால் என்னுடன் பேச மறுத்த வீரர்கள் குறித்த விபரத்தை வெளிப்படுத்த முன்பு தைரியம் இல்லை ஆனால் இப்போது அதனை சொல்லும் தைரியம் எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார் 
 
மேலும் தன்னுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள் என்றும் எவ்வளவுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் எந்த ஒரு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார். டேனிஷ் கனேரியாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments