Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து சென்ற பாக் வீரர்கள் பயிற்சிக்கு அனுமதி!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (17:37 IST)
நியுசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றுள்ளது.

டிசம்பர் 18ஆம் தேதி முதல் டி20 தொடரும், டிசம்பர் 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது என்பதும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து உடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 54 பேருக்கும் கடந்த வாரம் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 44 பேருக்கு கரோனா இல்லை என்பது உறுதியானது. ஆறு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 பேர் இதற்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அடுத்த கட்ட பரிசோதனையில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதியானது. அவர் இப்போது அணியில் இருந்து விலகிக்கொண்டார்.

இதையடுத்து பாகிஸ்தான் அணியினர் பயிற்சி மேற்கொள்ள நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments