இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்த கிரிக்கெட்டால் முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு நடைபெறவே இல்லை. உலக கோப்பைகளில் மோதி கொள்வது தவிர்த்து ஒருநாள் மற்றும் டி 20 ஆட்டங்களில் கூட இரண்டு அணிகளும் விளையாடுவதை தவிர்த்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இனைந்து விளையாட வேண்டியது அவசியம் என முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முஷ்டாக் அகமது கூறியுள்ளார். மேலும் ”இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் மீண்டும் நடைபெற வேண்டும். கிரிக்கெட்டால் இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படும் என்று நம்புகிறேன். இரண்டு நாடுகளும் இணைந்து விளையாட வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
ஆஷஸ் கோப்பை விளையாட்டு தொடரை விட இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் சுவாரஸ்யமானது” என அவர் தெரிவித்துள்ளார்.