Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய வீரர்கள் பயந்துவிட்டார்கள்… இன்சமாம் உல் ஹக் விமர்சனம்!

Advertiesment
இந்திய வீரர்கள் பயந்துவிட்டார்கள்… இன்சமாம் உல் ஹக் விமர்சனம்!
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (17:07 IST)
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோற்றது அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை இல்லாமல் ஆக்கியது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களால் எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்டது. வலுவான அணியான இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டி பற்றி பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்துவிட்ட நிலையில் முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் இன்சமாம் உல் ஹக் இப்போது இதுபற்றி பேசியுள்ளார்.

அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘போட்டிக்கு முன்பாகவே இந்திய வீரர்கள் பயத்திலும் பதற்றத்திலும் இருந்தார்கள். டாஸ் போட வரும்போதே கோலி பதற்றமாகதான் இருந்தார். ரோஹித் ஷர்மா உள்ளிட்ட வீரர்களும் பதற்றத்துடன் ஆடினர். இந்திய அணி சிறந்த அணி. கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் விளையாடியதைப் பார்க்கும்போது அவர்கள்தான் கோப்பையை வெல்வார்கள் என்று தோன்றியது. ஆனால், பாகிஸ்தானுடனான போட்டி இந்திய வீரர்களுக்கு பெரும் அழுத்த்தைக் கொடுத்து, பயத்தைக் கொண்டு சேர்த்தது.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது ஆரம்பம்தான்… ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாழ்த்து சொன்ன ரிக்கி பாண்டிங்!