பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஹமது சேஷாத், இந்திய கேப்டன் தோனி போல ஹெலிகாப்டர் ஷாட் அடித்துள்ளார்.
மோசமான பார்ம், சர்ச்சைகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் அஹமது சேஷாத்.
மீண்டும் சர்வதேச அணியில் இடம் பிடிக்க போராடிவரும் அஹமது, பாகிஸ்தானில் நடந்த தேசிய ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பங்கேற்றார்.
இதில் அஹமது சேஷாத் சதம் அடித்தார். போட்டியின் போது, இந்திய கேப்டன் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார்.