Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஸ்பாவுக்கு அனுபவம் போதாது – பாக் முன்னாள் வீரர்கள் கருத்து !

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (14:58 IST)
பாகிஸ்தான் பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் செயல்பட மிஸ்பா உல் ஹக்குக்கு அனுபவம் இல்லை என பாக் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது மிக மோசமான காலகட்டத்தில் உள்ளதி. அணிக்குப் புத்துணர்ச்சி அளிக்க அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் வந்தவுடனேயே அணிக்கு மிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மேலும் கேப்டன் பொறுப்பில் தொடர்ந்து சொதப்பி வரும் சர்பராஸ் அகமதுவை மீண்டும் கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் அவரின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர்களான் ஷாகித் அப்ரிடி மற்றும் ஜாகிர் அப்பாஸ் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஜாகிர் அப்பாஸ் ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்சி மிகவும் கடினமானது. அதனால் சர்பராஸ் கேப்டன் பதவியை நீக்க வேண்டும். மேலும் மிஸ்பா உல் ஹக்குக்கும் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் பதவி கூடுதல் சுமையைக் கொடுக்கும். அதைக் கையாளும் அளவுக்கு அவருக்கு அனுபவம் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் மே 12ஆம் தேதி சிஎஸ்கே-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?

ஸ்பின்னர்களுக்கு எதிராக தோனி தடுமாறுகிறார்… காரணம் இதுதான் –முன்னாள் வீரரின் கருத்து!

“உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது என் கையில் இல்லை”- நடராஜன் கருத்து!

கனத்த இதயத்துடன் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுகிறேன்: பத்திரனா அதிர்ச்சி அறிவிப்பு..!

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறப்புப் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments