காமன்வெல்த் போட்டி அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் பி.வி.சிந்து
, சனி, 24 மார்ச் 2018 (17:06 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டி தொடக்க விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் போட்டி வருகிற ஏப்ரல் 4-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் 14 விளையாட்டுகளில் 219 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டிகளுக்கான தொடக்க விழா ஏப்ரல் 4-ந் தேதி கார்ரா ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடக்க விழாவில் அனைத்து நாட்டு கொடிகளையும் ஒவ்வொரு நாட்டு வீரர்-வீராங்கனைகளும் ஏந்தி செல்வர். அவர் பின்னர் அந்த நாட்டு வீரர்கள் அணிவகுத்து செல்வார்கள்.
இந்நிலையில்,காமன்வெல்த் போட்டிகளுக்கான நடக்கவுள்ள தொடக்கவிழாவில் இந்திய அணி சார்ப்பில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.
அடுத்த கட்டுரையில்