ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு அறையில் வசதிகள் இல்லை

ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு அறையில் வசதிகள் இல்லை

புதன், 3 ஆகஸ்ட் 2016 (17:45 IST)
விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 6-ஆம் தேதி பிரேசிலில் தொடங்குகிறது. இந்தியா சார்பாக 15 விளையாட்டுகளில் 120 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.


 


போட்டியில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனைகள் தங்க ரியோடி ஜென்ரோ நகரில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இந்திய ஆக்கி வீரர்கள் காற்றடிக்கப்பட்ட பை போன்ற சேரில் அமர்ந்து உள்ளனர்.  இந்திய ஆண்கள் ஆக்கி அணி தங்கியுள்ள அறைகளில் வசதிகள் தரப்படவில்லை என்று பயிற்சியாளர் ஒல்ட்மன்ஸ் இந்திய அணி குழு தலைவர் ராஜேஷ் குப்தாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். வீரர்கள் அறையில் போதுமான நாற்காலிகள், டி.வி. இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 2-வது டெஸ்ட்: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு