Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி! ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (05:25 IST)
இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நிதாஹாஸ் கோப்பையின் இறுதியாட்டம் நேற்று நடைபெற்றது. இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ரன்கள் எடுத்தது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பத்திலேயே தவான் மற்றும் ரெய்னா விக்கெட்டை இழந்தாலும் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 56 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 24 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் முதல் பந்தில் வைடும், 2வது பந்தில் ஒரு ரன்னும், 3வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்ததால் கடைசி 3 பந்துகளில் 9 ரன்கள் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. மேலும் 4வது பந்தில் நான்கு ரன்களும் ஐந்தாவது பந்தில் விக்கெட்டும் விழுந்ததால் கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. தினேஷ் கார்த்திக் கையில் தான் சாம்பியன் பட்டம் இருந்த நிலையில் கடைசி பந்தை அற்புதமான ஷாட் அடித்து 6 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இல்லாமல் கோப்பையை கைப்பற்றியது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது. தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாகவும், வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த தினேஷ் கார்த்திக் நேற்றைய ஹீரோவாக மாறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments