இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் அதற்கு பதிலாக டி20 தொடரில் இந்திய அணிக்கு பதிலடி கொடுப்போம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
இன்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு முன் செய்தியாளரிடம் பேசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கலஸ் பூரன் இந்திய அணிக்கு சவால் விடுத்தார்
மேற்கிந்திய தீவுகள் அணி டி20 தொடரில் வித்தியாசமான அணியாக இருக்கும் என்றும் இந்த தொடரில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும் என்றும் தெரிவித்து உள்ளார்.
இந்திய அணியை எதிர்கொள்ள நாங்கள் தயாராக காத்துக் கொண்டிருக்கின்றோம் என்றோ ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை முழுமையாக வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுப்போம் என்றும் கூறியிருக்கிறார்