Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொனால்டோ சாதனையை முறியடித்த நெய்மார் – இன்னும் பீலே மட்டும்தான் பாக்கி!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (16:55 IST)
பிரேசில் அணியைச் சேர்ந்த நெய்மார் தனது அணிக்காக அதிக கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் பிரேசில் அணிக்காக விளையாடி வருகிறார் நெய்மார். இதுவரை 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 64 கோல்களை அடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக நடந்த உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பெரூ அணிக்கு விளையாடிய போது ஹாட்ரிக் கோல் அடித்தார். அதன் மூலம் பிரேசில் அணிக்காக 62 கோல்களை அடித்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார்.

இவருக்கு கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே மட்டுமே உள்ளார். அவர் பிரேசிலுக்காக 77 கோல்களை அடித்துள்ளார். அந்த சாதனையையும் நெய்மார் விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments