ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டத்தில் இப்போது ப்ளே ஆஃப் செல்லும் அணிகள் வாழ்வா சாவா போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
வழக்கமாக சொதப்பலாக விளையாடும் பெங்களூர் அணி இந்த முறை சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. 12 போட்டிகளில் 8 ல் வெற்றி பெற்று இப்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. அதனால் அடுத்து வரும் போட்டிகளை அந்த அணி ஏனோ தானோவென்று விளையாட முடியாது.
ஏனென்றால் அந்த இரு போட்டிகளையும் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களுக்குள் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் சன் ரைசர்ஸ் ஜதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளோடு மோத உள்ள கடைசி இரண்டு போட்டிகளும் அந்த அணிக்கு முக்கியமானவை ஆகும்.