நியூசிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி மிக அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் மூன்றே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் அடித்தது என்பதும் கேப்டன் லாதம் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பதும் அதனை அடுத்து அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
இதனையடுத்து நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இன்னிங்சில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது