Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹபீஸின் அதிரடி 99 வீன் – எளிதாக வெற்றி பெற்ற நியுசிலாந்து!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (16:27 IST)
பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

நியுசிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துவிட்டு இப்போது டி 20 தொடரை விளையாடி வருகிறது. இன்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஹபீஸை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பினர். மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய ஹபீஸ் 57 பந்துகளில் அதிரடியாக 99 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் பாக் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் களமிறங்கிய நியுசி அணி குப்தில் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார் டிம் செய்ஃபெர்ட். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி கடைசி வரை அவுட் ஆகாமல் வெற்றிக்கு தேவையான 163 ரன்களை எட்டினர். செய்பெர்ட் 83 ரன்களும் வில்லியம்சன் 57 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments