Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டி20 போட்டி: இந்தியா அதிர்ச்சி தோல்வி

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (15:51 IST)
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றுள்ள நிலையில் இன்று வெலிங்டன் நகரில் இரு அணிகளுக்கும் இடையே டி20 போட்டி தொடர் தொடங்கியுள்ளது
 
இன்றைய முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் பந்துவீச தீர்மானித்ததால் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் செய்பெர்ட் 84 ரன்களும், முன்ரோ, வில்லியம்சன் தலா 24 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது
 
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி இந்திய அணி 19.2 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணி இந்த போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தவான் 29 ரன்களும், ஷங்கர் 27 ரன்களும், தோனி 39 ரன்களும் எடுத்தனர்,. 
 
இந்த வெற்றியால் நியூசிலாந்து அணி 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments