Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 விக்கெட்களை இழந்து போராடும் இந்தியா – நியுசி பவுலர்கள் மிரட்டல் !

6 விக்கெட்களை இழந்து போராடும் இந்தியா – நியுசி பவுலர்கள் மிரட்டல் !
, புதன், 6 பிப்ரவரி 2019 (15:25 IST)
இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் 220 ரன்கள் இலக்கைத் துரத்தும் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது.

நியுசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய நியுசிலாந்து அணியின் பேட்டிங்கில் அனல் பறந்தது. ஓவருக்கு 10 ரன்கள் வீதம் சராசரியாக அடித்து நொறுக்கினர்.
webdunia

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான காலின் மன்ரோ 34 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரரான செய்ஃபர்ட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்து 43 பந்துகளில் 84 ரன்கள் அடித்துக் கலக்கினார். கேப்டன் வில்லியம்சனின் 34 ரன்களும், ராஸ் டெய்லரின் 23 ரன்களும் அந்த அணி 219 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.

இதையடுத்து 220 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணி ஆரம்பம் முதலே ரன் சேர்க்க முடியாமலும் விக்க்ட்களை இழந்தும் தடுமாறி வருகிறது. இந்திய அணியில் ரோஹித் 1 ரன்னிலும், ரிஷப் பாண்ட் 4 ரன்களிலும், தினேஷ் காத்தி 5 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களிலும் என ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதிகபட்சமாக ஷிகார் தாஅன் 29 ரன்களையும் விஜய் ஷங்கர் 27 ரன்கலையும்  சேர்த்தனர்.

தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 14 ஓவர்களில் 97 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 6 ஓவர்களில் 123 ரன்கள் தேவையாக இருப்பதால் இந்தியாவின் வெற்றி சாத்தியமில்லாததாக மாறியுள்ளது. களத்தில் தோனியும் குருனால் பாண்ட்யாவும் விளையாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு 220 ரன்கள் இலக்கு – அடித்து நொறுக்கிய நியுசிலாந்து..