Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியை நடத்த மற்றொரு நாடு விருப்பம் – சம்மதிக்குமா பிசிசிஐ?

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (18:09 IST)
ஐபிஎல் 2020 தொடரை நடத்த நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகின் அதிக லாபம் கொட்டும் விளையாட்டுத் தொடர்களில் ஒன்றாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் 2020 சீசன் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது அதனால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கணக்கில் கொண்டு எப்படியாவது நடத்தி தீர்வது என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் ஆளில்லாத மைதானங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இது சம்மந்தமாக ஐக்கிய அரபுகள் அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளது.

நியுசிலாந்தில் கொரோனா வைரஸ் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இந்நிலையில் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்தை பிசிசிஐ பரிசீலிக்குமா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்குப் பிறகு ரிஷப் பண்ட்தான்… அவர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. கங்குலி புகழாரம்!

இந்திய ஆஸ்திரேலியா தொடர்… அணியில் இடம் கிடைக்காததால் புஜாரா எடுத்த முடிவு!

ஒப்பந்தம் ஆன இருபதே நாட்களில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கில்லஸ்பி நீக்கம்… என்னதான் நடக்குது பாக். கிரிக்கெட்டில்?

இந்திய அணியின் கேப்டன் ஆனார் பும்ரா.. ரோஹித் சர்மா விலகியது ஏன்?

அந்தரத்தில் தொங்கும் பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபி! அடுத்தடுத்து விலகும் முக்கிய வீரர்கள்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments