சமூகப் பரவலை எட்டிவிட்டோம்: போட்டு உடைத்த கேரளா!

திங்கள், 6 ஜூலை 2020 (13:43 IST)
கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டதாக கேரள அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த போது கேரளாவில் அதிகளவிலான தொற்று காணப்பட்டது. ஆனால் அம்மாநில அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.  
 
கேரளாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,429. ஆனாலும் கேரளாவில் அடுத்த ஆண்டு வரை லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  
 
ஆம், கேரளா கொரோனா வைரஸ் தொற்றுநோய் கூடுதல் விதிமுறைகள் 2020 என்ற பெயரில் ஒருவருடத்துக்கான கட்டுப்பாடுகளை கேரள அரசு விதித்துள்ளது.
 
இதனோடு இந்தியாவிலேயே முதல் முறையாக தங்களது மாநிலத்தில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டதாக கேரள அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது. 
 
இதன காரணமாகவே தொற்றுநோய் தடுப்பு தொடர்பான சட்டத்தை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்து உள்ளது. அதோடு மாஸ்க் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் கட்டாயமாக்கியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வங்கிகளை மிரட்ட விட்டு வேடிக்கை பாக்காதீங்க! – மு.க.ஸ்டாலின் காட்டம்!