Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி நியுசிலாந்து – ஒரே நாளில் 15 விக்கெட்களை இழந்த விண்டீஸ்!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (15:20 IST)
நியுசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் நியுசிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி நிதானமான தொடக்கத்தை ஆரம்பித்தது. முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்திருந்த்து. கேப்டன் வில்லியம்சன் 97 ரன்களுடனும் டெய்லர் 31 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 

அதையடுத்து இன்று களமிறங்கிய நியுசிலாந்து அணியில் மற்ற வீரர்கள் எல்லாம் அவுட் ஆனாலும் மறுமுனையில் நின்று விளையாடிய கேன் வில்லியம்ஸன் இரட்டை சதம் அடித்தார். மேலும் 51 ரன்கள் சேர்த்த வில்லியம்ஸன் 251 (412 பந்து 34 பவுண்டரி 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். நியுசிலாந்து அணி 7 விக்கெட்களுக்கு 519 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்துள்ளது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து பாலோ ஆன் பெற்ற அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 89 ரன் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் 6-விக்கெட்டுகளை இழந்தது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கே - லக்னோ போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

IPL 2024: வாங்கிய அடியை திருப்பி கொடுக்குமா சிஎஸ்கே? இன்று LSG உடன் மோதல்!

மீண்டும் சிஎஸ்கே கோட்டையில் டெவான் கான்வே.. ஆனால் இந்த வீரர் விலகல்? – ரசிகர்கள் மகிழ்ச்சி!

சும்மா ப்ளேயர்ஸ நீக்குறது பிடிக்காது.. பாத்து நடந்துகோங்க! – மும்பை வீரர்களை சூசகமாக எச்சரித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

நிதானத்தை இழந்த கோலி வாக்குவாதம்… தண்டம் விதித்த பிசிசிஐ… !

அடுத்த கட்டுரையில்
Show comments