3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூசிலாந்து

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (14:30 IST)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


 

 
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடும் நெருக்கடியில் உள்ளார். டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் 10 ஓவரிலே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது நியூசிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ராஸ் டெய்லர் மற்றும் டாம் லதாம் அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments