Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை இந்தியர் கால்பதிக்காத இடம்..! – சாதனை காலடி வைத்த நீரஜ் சோப்ரா!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (11:19 IST)
இதுவரை இந்தியர் எவரும் ஜெயித்திராத சுவிட்சர்லாந்தின் டயமண்ட் லீக் மீட் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்திய ஈட்டி எறிதல் தடகள வீரரான நீரஜ் சோப்ரா உலகம் முழுவதிலும் நடைபெறும் பல போட்டிகளிலும் கலந்து கொண்டு ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு காயங்கள் ஏற்பட்டதால் லண்டனில் நடந்த காமன்வெல்த் தொடரில் பங்கேற்கவில்லை. அதை தொடர்ந்து தற்போது ஸ்விட்சர்லாந்தில் லாசென் நகரில் நடைபெற்று வரும் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்றார் நீரஜ் சோப்ரா.

அதில் அரையிறுதி போட்டியில் ஈட்டி எறிதலில் 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கினார் நீரஜ் சோப்ரா. இந்த போட்டிகளில் இதுவரை ஒரு இந்தியர் கூட வெற்றி பெற்றிராத நிலையில் அந்த தடையை நீரஜ் சோப்ரா உடைத்துள்ளதுடன், சாம்பியன் பட்டம் வென்று இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments