சினிமாவாகும் நடராஜன் வாழ்க்கை வரலாறு: படையெடுக்கும் இயக்குனர்கள்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (07:23 IST)
எனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க பல இயக்குனர்கள் என்னை அணுகினார்கள் என்று தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்ற போது அந்த அணியில் நெட் பவுலராக சென்றவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். அதன் பின்னர் அவர் ஒருநாள் போட்டிகளிலும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார் 
 
இந்த நிலையில் கிட்டத்தட்ட அவருக்கு இந்திய அணியில் நிரந்தர வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க பல இயக்குனர்கள் அவரை அணுகி உள்ளனர் 
 
இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது ’எனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஒரு சில இயக்குனர்கள் என்னை சந்தித்தார்கள். வீடு தேடி வந்து என்னை அவர்கள் சந்தித்து தங்களது விருப்பத்தை தெரிவித்த போதெல்லாம் எனக்கு அதில் ஆர்வம் இல்லை என்று கூறி விட்டேன். இப்போதைக்கு முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் மட்டுமே செலுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்
 
இருப்பினும் அவர் விரைவில் தனது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை எடுக்க சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எந்த இயக்குனருக்கு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments