Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை நேரில் காண வேண்டும் என்பது வாழ்நாள் கனவு: சிஎஸ்கே அணியில் இணைந்த ஹரி நிஷாந்த்

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (07:02 IST)
தோனியை நேரில் காண வேண்டும் என்பது வாழ்நாள் கனவு
தோனியை நேரில் காண வேண்டும் என்பது தனது வாழ்நாள் கனவு என சிஎஸ்கே ஏலம் எடுத்துள்ள தமிழக வீரர் ஹரி நிஷாந்த் தெரிவித்துள்ளார் 
 
நேற்று ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நிலையில் முன்னணி வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு அனைத்து அணிகளும் ஏலம் எடுத்தனர் என்பது தெரிந்ததே. சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் உட்பட பலர் இந்த ஏலத்தில் எடுக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிஎஸ்கே அணி தமிழகத்தைச் சேர்ந்த ஹரி நிஷாந்த் என்ற வீரரை ஏலம் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து ஹரி நிஷாந்த் பேட்டி அளித்தபோது தோனியை நேரில் காண வேண்டும் என்பது எனது கனவு என்றும் தற்போது அவருடன் விளையாட போகிறேன் என்பதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்நாள் கனவு இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவேற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments