Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஃபுட்சால் கால்பந்து மும்பை வெற்றி.....

சென்னையில் ஃபுட்சால் கால்பந்து மும்பை வெற்றி.....

Webdunia
சனி, 16 ஜூலை 2016 (12:31 IST)
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  புட்சால் கால்பந்து முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது.



 

 


ஃபுட்சால் கால்பந்து பிரிமியர் லீக் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று ஏ.ஆர். ரகுமான் இசையுடன் கோலாகலமாக தொடங்கியது.

கால்பந்து டி20 ஆன ஃபுட்சால்:

மூன்று மணி நேரம் வரை திறந்தவெளி மைதானத்தில் விளையாடப்படும் கால்பந்து விளையாட்டை மொத்தமாய் சுருக்கி உள்விளையாட்டரங்கில் நம்ம ஊர்
 டி20 கிரிக்கெட் போல, மொத்தம் நாற்பது நிமிடத்தில் விறுவிறுப்புடன் விளையாடித் தீர்ப்பது ஃபுட்சால்.
ஃபுட்சால் போட்டியில் ஒரு அணியில் மொத்தம் 12 வீரர்கள் இருப்பார்கள். ஆனால் களத்தில் கோல் கீப்பர் உட்பட 5 வீரர்கள் மட்டுமே விளையாடுவார்கள். உள்ளரங்க மைதானத்தில் மட்டுமே போட்டி நடைபெறும். கோல் கம்பம் மற்றும் பந்து வழக்கத்தை விட சிறிய அளவில் இருக்கும்.

முதல் பாதி 20 நிமிடம் அடுத்த பாதி 20 நிமிடம் என மொத்தம் 40 நிமிடங்கள். 15 நிமிடங்கள் இடைவேளை வழங்கப்படும். சென்னை, கோவா, மும்பை, கொச்சி, பெங்களூரு என ஒவ்வொரு அணிக்கும் ஐந்து வீரர்கள் கொண்ட ஆட்டம் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.

சென்னை - மும்பை முதல் ஆட்டம்:

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் பிரேசில் வீரர் பால்கோவும், மும்பை அணியில் மான்செஸ்டர் யுனைடெட் முன்னாள் கேப்டன் ரேயான் கிக்ஸூம் நட்சத்திர வீரர்களாக களமிறங்கினர்.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - கொச்சி அணிகள் மோது கின்றன. இதைதொடர்ந்து 8 மணிக்கு நடை பெறும் 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா, பெங்களூரு அணியை சந்திக்கிறது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments